மோகூர்

பழையனின் ஊராக, சங்ககாலம் தொட்டே தெரியவரும் ஊர் மோகூர். திருமால் கோயில் கொண்டமையின் பாடல் பெற்றது. திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பாடிய இத்தலம், இன்று மதுரை மாவட்டத்தில் உள்ளது. இதனைப்பற்றி, திருமோகூர் தென் பறம்பு நாட்டின் பகுதியாக விளங்கிற்று என்று கல்வெட்டு ஒன்று கூறுகிறது. பறம்பு நாடு பாரியின் நாடு. மோகூரில் பழை யன் என்பவனுடைய பலத்த கோட்டை இருந்தது. இது காவல் அரணாக விளங்கிற்று எனப் பாடல்கள் கூறுகின்றன என்ற எண்ணங்கள் அமைகின்றன. திருமால் மோகன வடிவுடைய மோகினியாக இங்குத் தோன்றிய காரணமே இப்பெயர்க்காரணம் எண்ணமும் உண்டு. மோகம்’ என்பதற்குத் தமிழ் லெச்ஸிகன், பல பொருட்களைக் கொடுப்பினும் பாதிரி அல்லது மோகமுடையவர் ஆகிய பொருட்களின் அடிப்படையில் இப் பெயர்த் தோன்றியிருக்கக் கூடும் என்பதே பொருத்தமாக அமைகிறது.