பழையன் என்பவனுக்குரியதாய் இருந்திருக்கிறது மோகூர் என்னும் ஊர். மோரியர் படை மோகூரைத் தாக்கியபோது, உற்றுழி உதவுவதாக வஞ்சினங்கூறி இருந்த கோசர், மோகூர் அவையத்து ஆலமரத்தடியில் தோன்றி மோரியரைப் புறங்கண்டனர் என்ற வரலாறு உள்ளது.
“மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள்,
பழையன் மோகூர் அவையகம் விளங்க,
நான் மொழிக் கோசர் தோன்றி யன்ன,
தாம் மேஎந்தோன்றிய நாற்பெருங்குழுவும்” (பத்துப். மதுரைக். 507 510)
“நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை
சேணன் ஆயினும், கேள் என மொழிந்து,
புலம் பெயர்ந்து, ஒளித்த கனையரப் பூசற்கு,
அரண்கள் தாவுறீஇ, அணங்கு திகழ்ந்தன்ன
மோகூர் மன்னன் முரசங் கொண்டு
நெடுமொழி பணித்து, அவன் வேம்பு முதல் தடிந்து
முரசு செய முரச்சி, களிறு பல பூட்டி
ஒழுகை உய்த்தோய்: (பதிற். 44.10. 17)
“களிறு பரந்து இயல, கடுமா தாங்க,
ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப;
எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடுந்தார்,
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்று மொழிந்து,
மொய்வளம் செருக்கி, குழூ நிலை அதிரமண்டி” (௸. 49; 4.9)
“துனை கால் அன்ன புனைதேர்க் கோசர்
தொல் மூதாலத்து அரும்பணைப் பொதியில்,
இன்னிசை முரசங் கடிப்பு இகுத்து இரங்க,
தெம்மூலை சிதைத்த ஞான்றை, மோகூர்
பணியாமையின், பகை தலைவந்த
மாகெழுதானை வம்ப மோரியர்
புனை தேர் நேமி உருளிய குரைத்த” (அகம். 21. 7 13)