ஒரு பாடலில் வந்த மொழியே மீண்டும் வர அமைப்பது. இது மடக்கணிவகைகளுள் அடங்கும்.எ-டு : ‘மாதராள் மாதர்நோக் குண்ட மடநெஞ்சம்காதலார் காதன்மை காணாதே – ஏதிலார்வன்சொல்லான் வன்பொறை சொல்லிலெழில் மானோக்கிஇன்சொல்லா லின்புறுமோ ஈங்கு’.“இப்பெண்ணின் காதல்பார்வையிற் பட்ட என் மடநெஞ்சம், நான் கொண்டஆசையை அறியாது, அயலார் போலத் தோழி யான் அரிதின் பொறுக்குமாறுவன்சொற்கூறி என்னை விலக்குவாளாயின், அது பற்றிக் கவலைப்படாமல் தலைவிஇனிமையாகப் பார்த்துக் கண்ணால் பேசிய சொற் களை நினைத்து இன்புறுமோ?”என்று, தலைவன், தன்னைத் தோழி சேட்படுத்தியவழி வருந்திக்கூறியஇப்பாடற்கண், மாதராள், மாதர் – காதலார், காதன்மை – வன் சொல், வன் பொறை- இன்சொல், இன்புறுமோ – எனச் சொன்ன சொல்லே ஒவ்வோரடியிலும் மீண்டுவருதல் மொழிவழி நிலையாம். (வேறு பொருள் படாமையின் மடக்கு ஆகாமை அறிக.)(வீ. சோ. 159 உரை)