செய்யுளில் ஓசைநயம் கருதி ஒரோவழி அருகிப் பெயர்ச் சொற்கள்முதல்இடைகடைகளில் ஓரெழுத்துக் குறைந்து முதற்குறையாகவும்இடைக்குறையாகவும் கடைக்குறையாக வும் வருதல்செய்யுள்விகாரத்தின்பாற்படும். இக்குறை விகாரம் பகாப்பதத்தின் கண்ணது.(தொகுத்தல் விகாரம் புணர்மொழிக்கண்ணதாம்.)எ-டு : ‘மரையிதழ்’ (குறுந். 140) – தாமரை என்பது முதல்குறைந்தது. ‘ஓதி முது போத்து’ – ஓந்தி என்பது இடை குறைந்தது. ‘நீலுண்துகிலிகை’ – நீலம் என்பது கடைக் குறைந்தது (அம்). (நன்.156)