மொழிக்கு முதற்காரணம் எழுத்தானாற்போல, எழுத்திற்கு முதற்காரணம்அணுத்திரள் என்பது பெற்றாம். முற்கு வீளை முதலியவற்றிற்குமுதற்காரணமாய் அணுத்திரளின் காரிய மாய் வரும் ஒலி எழுத்தாகாமையின்,‘மொழி முதற்காரணமாம் ஒலி’ என்றார். சிதலது நீர்வாய்ச் சிறுதுகளால்பெரும்புற்று உருவமைந்த பெற்றியதென்ன ஐம்புலப் பேருரு ஐந்தும் ஐந்துஅணுவால் இம்பரில் சமைவது யாவரும் அறிதலின், அநாதி காரணமாகிய மாயையினைஈண்டுக் கூறாது, ஆதிகாரண மாகிய செவிப்புலனாம் அணுத்திரளை எழுத்திற்குமுதற் காரணம் என்றார். இவ்வாசிரியர்க்கு மாயை உடன்பாடன்று, அணுத்திரள்ஒன்றுமே துணிவு எனின், ‘பிறிதொடு படாஅன் தன் மதம் கொளல்’ என்னும்மதம்படக் கூறினார் என்றுணர்க. ஈண்டு அணு என்றது ஒலியினது நுட்பத்தை.(நன். 58 சங்கர.)