மொழிமரபு என்னும் ஆறன்தொகை, மொழியினுடைய மரபுகளைக் கூறும் இயல்- எனவிரிதலின் அன்மொழித் தொகை. நூல்மரபில் கூறிய எழுத்துக்கள் மொழியாகும்முறைமையும், அவை மொழிக்கண் நிற்கும் நிலையும், மொழிப் பொருள் மாறாமல்எழுத்து மாறி வரும் போலி மரபும் பற்றிக் கூறுதலின்,இவ்வியல் மொழிமரபுஎனப்பட்டது. (தொ. எ. பக். 98 ச. பால.)