உயிர் பன்னிரண்டும், ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் மெய்யெழுத்துப்பதினொன்றும், குற்றியலுகரமும் மொழி யிறுதிக்கண் நிற்கும்எழுத்துக்களாம். ஆக அவை இருபத்து நான்கு. (நன். 107)தாமேயும் அளபெடுப்புழியும் மெய்யொடு கூடியும் வரும் உயிரீறுநூற்றறுபத்து மூன்றும், மெய்யீறு பதினொன்றும், குற்றுகர ஈறு ஒன்றும் -ஆகப் பொதுவகையானும் சிறப்பு வகையானும் ஈறு நூற்றெழுபத்தைந்தும் கொள்க.அவற்றுள் உதாரணம் காணாதன இருபத்திரண்டு. அவையும் வந்துழிக் காண்க.(இ.வி. 29 உரை)அ ஆ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ – என்னும் உயிர் ஒன்பதும், ணகர மகர னகரம்என்னும் மெல்லினம் மூன்றும், ய ர ல வ ழ ள – என்னும் இடையினம் ஆறும்மொழிக்கு ஈறாம் எழுத்துக்கள் (ஒகரம் நகரத்தொடு கூடி ‘நொ’ என இவ்வொருசொல்லிடத்தே மாத்திரம் ஈறாக வரும் என்பர் உரையாசிரியர்) (நே. எழுத்.8)உயிரெழுத்துக்களுள் எகர ஒகரம் நீங்கலான ஏனைய பத்தும், மெல்லினஎழுத்துக்களுள் ணகார மகார னகாரங்களாகிய மூன்றும், இடையினஎழுத்துக்களுள் வகாரஒற்று நீங்கலான ஐந்தும் மொழி இறுதிஎழுத்துக்களாம். (வீ.சோ. சந்திப். 8)அருகியே மொழியீறாக வரும் ஞகார நகார வகார ஒற்றுக்களை விடுத்துஏனையவற்றையே வீரசோழியம் குறிப்பிடுகிறது.