குறிலிணை அடுத்த மகரஈற்று அஃறிணைப் பெயர்களின் ஈற்று மகரத்துக்குனகரம் போலியாக வருதலுண்டு.எ-டு : அகம் – அகன் ; முகம் -முகன்; நிலம்- நிலம்; கலம் – கலன்(நன். 122)இனி, குற்றியலுகரஈற்றுப் பெயரின் இறுதி உகரத்துக்கு ‘அர்’ போலியாகவருதலும், ஈற்று லகரத்துக்கு ரகரம் போலியாக வருதலும், ஈற்றுமகரத்துக்கு லகரம் போலியாக வருதலும், சிறுபான்மை லகரத்துக்கு ளகரம்போலியாக வருதலும் உரையிற் கோடலாம்.எ-டு : சுரும்பு, சுரும்பர், வண்டு – வண்டர், சிறகு – சிறகர்;பந்தல் – பந்தர், சாம்பல் – சாம்பர், குடல் – குடர்;திறம்- திறல், பக்கம் – பக்கல், கூவம் -கூவல்;மதில் – மதிள் (நன். சடகோப. உரை)