மொழி இடைக்கண் அகரத்துக்கு ஐகாரம் ச ஞ ய – என்னும் மெய்களுக்குமுன்னர்ப் போலியாக வரும்.எ-டு : அரசு – அரைசு, இலஞ்சி – இலைஞ்சி, அரயர் -அரையர்.ஐகாரத்தில் பின்னரும் யகரத்தின் பின்னரும், சிறுபான்மை யாகநகரத்திற்கு ஞகரம் போலியாக வரும்.எ-டு : மைந்நின்ற – மைஞ்ஞின்ற; கைந்நின்ற – கைஞ்ஞின்ற;செய்ந்நின்ற – செய்ஞ்ஞின்ற; நெய்ந்நின்று – நெய்ஞ் ஞின்று; இவைசெய்யுள் வழக்கு.உலக வழக்கிலும் ஐந்நூறு, ஐஞ்ஞூறு, சேய்நலூர் சேய்ஞலூர் என வருமாறுகாணக. (நன். 123, 124)