எழுத்துக்கள் பலவற்றைக் கூட்டி நெருக்கி ஒருதொடர்ப்படக்கூறுமிடத்தும் தத்தம் வடிவும் அளவும் முதலாயின இயல்பின் திரியா,தனித்து நின்றாற் போலும் யாண்டும். (நன். 126 மயிலை.)எழுத்து ஒன்றோடொன்று மாலையில் தொடுக்கப்பட்ட மலர் போலத் தொடர்ந்துமொழியாகும். மாலையிலிருந்து மலர்களைச் சிதையாமல் உதிர்ப்பது போலமொழியிலுள்ள எழுத்துக்களைச் சிதைவின்றிப் பிரிக்கலாம்.சுண்ணத்தின்கண் அரிசனம் (மஞ்சட்பொடி) பிரிக்கப் படாமை போல்வதன்று,இத்தொடர்ச்சி. (நன். 127 சங்கர.)