மொழிமுதற்கண் அகரத்துக்கு ஐகாரம் ச ஞ ய – என்னும் மெய்களுக்கு முன்போலியாக வரும். (முன் : காலமுன்)எ-டு: பசல் – பைசல் , மஞ்சு – மைஞ்சு, மயல் – மையல்.இனி, ச ஞ ய – மெய்களுக்கு முன்னர் ஐகாரத்துக்கு அகரம் மொழிமுதற்போலியாக வருதலும் கொள்ளப்படும்.எ-டு: வைச்ச- வச்ச. ஐஞ்சு- அஞ்சு, பைய – பய. (நன். 123)