மொழிமரபு தொல்காப்பிய எழுத்துப் படலத்தின் இரண்டாம் இயல். இதன்கண்49 நூற்பாக்கள் உள. முதல் இயலாகிய நூல் மரபிற்குரிய ஒழிபுகள்மொழிமரபில் விளக்கப்படுகின்றன. துனித்துக் கூற இயலாது மொழிப்படுத்தேஉணரப்பட வேண்டிய சார்பெழுத்துக்கள் பற்றிய செய்தியும் இதன்கண்கூறப்பட்டுள.மொழிமரபின்கண்ணே முதல் 7 நூற்பாக்கள் சார்பெழுத்தின் ஒழிபு. அடுத்தஇரண்டு நூற்பாக்கள் உயிரளபெடையின் ஒழிபு. அடுத்த மூன்று நூற்பாக்கள்நெடில் குறில் இவற்றின் ஒழிபு. அடுத்த நூற்பா மெய்யின் ஒழிவு. 14ஆம்நூற்பா முதல் இயலிறுதி முடிய மெய்மயக்கத்தின் ஒழிபு. இப்பகுதியில்14ஆம் நூற்பா முதல் 20ஆம் நூற்பா முடிய மயக்கம்; அடுத்த ஐந்துநூற்பாக்கள் போலி; 26ஆம் நூற்பா முதல் 35ஆம் நூற்பா முடிய மொழிக்குமுதலாவன; அடுத்து வரும் 13 நூற்பாக்களும் மொழிக்கு இறுதியாவன. இறுதிநூற்பா போலி பற்றியது.இவ்வாற்றான் மொழிமரபு நூல்மரபினது ஒழியே யாகும். (சூ.வி. பக்.57)