மொழிமரபு தனிமொழியில் நிற்கும்எழுத்திலக்கணமே கூறல்

நூற்பாக்கள் – 1-7 : நூல்மரபில் கூறிய சார்பெழுத்துப்பற்றியன.8,9 : அளபெடைக்கு ஆவதொரு விதி10-12 : மொழிகள் வகை13, 14 : மெய்யெழுத்துக்கள் ஒலிக்கும் முறை, அவைமொழித்தன்மைப்பட்டு மயங்கும் மயக்கம்15-19: ஒருமொழிக்கண் மயங்கும் ஈரெழுத்துக்களும் அவற்றின்அளபும்20-24 : மொழிக்கண் நிற்கும் ஐ ஒள எழுத்துக்களில் படுவதொருவேறுபாடும் அளபும்25 : மொழியிறுதியில் நிற்கும் இகரத்தின் வேறுபாடு26-35: மொழிமுதற்கண் நிற்கும் எழுத்துக்கள்36-48: மொழிஈற்றில் நிற்கும் எழுத்துக்கள்49 : மொழியிறுதியில் நிற்கும் னகரத்தின் மாற்றம்35,37,39,40: தனிமொழியில் நிற்கும் சார்பெழுத்தைக் கூறி,இயைபுபட்டமையால் புணர்மொழிக்கண் படும் சார்பெழுத்தும் ஈண்டேகூறப்பட்டன, சூத்திரச் சுருக்கமும் பொருளியைபும் கருதி.இவவாற்றான், மொழிமரபு தனிமொழியில் நிற்கும் எழுத் திலக்கணமேகூறியதாம். (எ. ஆ. பக். 35)