மொழிமரபு கூறும் ஈரொற்றுடனிலை

தனிமொழியில் யகர ரகர ழகர மெய்களுக்கு முறையே ஙகரமும் ககரமும்,ஞகரமும் சகரமும், நகரமும் தகரமும், மகரமும் பகரமும் இணைந்து ஈரொற்றாய்நிற்றலே மொழிமரபில் கூறப்பட்ட ஈறொற்றுடனிலையாம்.இவற்றுள் பலவற்றிற்கு உதாரணம் இறந்தது.எ-டு : ங்க ஞ்ச ந்த ம்பய் தேய்ஞ்சது மேய்ந்தது மொய்ம்புர் – சேர்ந்தது -ழ் – வாழ்ந்தது -வேய்ங்குழல், ஆர்ங்கோடு, பாழ்ங்கிணறு- என்பன இரு மொழிப்புணர்ச்சிக்கண் வரும் ஈரொற்றுடனிலை யாதலின், இவை நூன்மரபின்மெய்ம்மயக்கத்திற்கே எடுத்துக்காட் டாகும். மொழிமரபில் கூறுவன யாவும்தனிமொழிக்கே உரிய செய்தியாம்.வேய்ங்குழல் – முதலியன புள்ளிமயங்கியல் 65, 68, 92ஆம்நுற்பாக்களில் கூறப்பட்டுள. (எ. ஆ. பக். 49 – 51)