மொழிப்படுத்திசைத்தல்

உயிர், மெய், உயிர்மெய்- என்ற எழுத்துக்களை ஒரு சொல்லில் அமைத்துஒலித்துக் காட்டுதல்.எ-டு : ஆல் – உயிர் முதல், மெய் ஈறு; பல – உயிர்மெய் முதல்,உயிர் மெய் ஈறு. (தொ. எ. 53 இள.)ஒற்றும் குற்றுகரமும் அரை மாத்திரை அளவினவாகக் குறைந்துஒலிக்குமேனும், அவை மொழியாக்கத்துக்குப் பயன்படுதலின் அவற்றையும்சேர்த்துச் சொற்களை உண்டாக்குதல்.ஆடு – உயிர்முதல், உயிர்ஈறு; ஆல் – உயிர்முதல், மெய்ஈறு;வரகு – மெய்முதல், குற்றியலுகர ஈறுஆ என்பது வேறு; ஆல் என்று லகர மெய்சேர்ந்தால் வரும் சொல் வேறு. வரஎன்பது வேறு; வரகு என்ற குற்றியலுகர ஈற்றுச் சொல் வேறு. (தொ. எ. 53,நச். உரை)