பெயரொடு பெயரும், பெயரொடு வினையும், வினையொடு வினையும், வினையொடுபெயரும் புணரும்போது, இயல்பாகப் புணர்தல் ஒன்று, திரிந்து புணர்தல்(மெய்பிறிதாதல்) – மிகுதல் – குன்றல் – என மூன்று, ஆக மொழிகள் தம்முள்கூடுமுறை நான்காம்.எ-டு: சாத்தன்+ வந்தான் = சாத்தன் வந்தான் – இயல்பு; பொன் +பூண்= பொற்பூண் – மெய் பிறிது ஆதல்; நாய்+ கால் = நாய்க்கால் – மிகுதல்;மரம் + வேர் =மரவேர் – குன்றல்; சாத்தன் + கை = சாத்தன் கை -பெயரொடுபெயர்; சாத்தன் + வந்தான் = சாத்தன் வந்தான் – பெயரொடு வினை; வந்தான்+ போயி னான் = வந்தான் போயினான் – வினையொடு வினை; வந்தான் + சாத்தன் =வந்தான் சாத்தன் – வினை யொடு பெயர் (தொ. எ. 108)