பன்னீருயிரும், உயிரொடு கூடிய க ச த ப ஞ ந ம ய வ – என்னும் ஒன்பதுமெய்யும், குற்றியலுகரமும் மொழிக்கு முதலாவன.இவற்றுள் க த ந ப ம – என்னும் ஐந்து மெய்களும் பன்னீருயிரொடும்கூடி மொழிக்கு முதலாம். சகரமெய் அ ஐ ஒள – நீங்கலான ஒன்பதுஉயிர்களொடும், வகரமெய் உ ஊ ஒ ஓ – நீங்கலான எட்டு உயிர்களொடும்,ஞகரமெய் அ இ ஈ உ ஊ ஏ ஐ ஓ ஓள- நீங்கலான மூன்று உயிர்களொடும், யகரமெய் ஆஎன்பதனொடும் – கூடி உயிர்மெய்யாகி மொழிக்கு முதலில் வரும். வரவே,மொழிக்கு முதலாகும் எழுத்துக்கள் உயிர் 12, க த ந ப ம – வருக்கங்கள்(5 x 12=) 60, ச-9, வ – 8, ஞ-3, ய – 1, குற்றியலுகரம் 1-ஆக, 94ஆகும்.மொழிக்கு ஈறாம் எழுத்துக்கள் உயிர் – 12, ஙகரம் நீங்கலான மெல்லினம்- 5, இடையினம் – 6, குற்றியலுகரம் – 1, ஆக 24 எழுத்துக்களாம்.இவற்றுள் உயிர்மெய் முதலை மெய்முதலாக வும், உயிர்மெய்யீற்றைஉயிரீறாகவும் கொண்டு, மொழிக்கு முதலும் ஈறுமாக வரும் எழுத்துக்களைஉயிர் – மெய் – குற்றியலுகரம் – என்ற மூன்று தலைப்பில் அடக்கி,மொழிக்கு முதலாவன உயிர் – 12, மெய் – 9, குற்றியலுகரம் – 1, ஆக, 22எனவும், மொழிக்கு ஈறாவன உயிர் – 12, மெய் -11, குற்றியலுகரம் – 1 ஆக24 எனவும் சுருக்கிக் கூறுப. (தொ.எ. 103 நச்.)