உயிரெழுத்துப் பன்னிரண்டும், ககார சகார தகார நகார பகார மகாரவருக்கங்களும், வகார வருக்கத்தில் உ ஊ ஒ ஓ- அல்லாத எட்டும், யகாரவருக்கத்தில் அ ஆ உ ஊ ஓ ஓள- ஆகிய ஆறும், ஞகார வருக்கத்தில் அ ஆ எ ஓ -ஆகிய நான்கும் என்னும் இவையனைத்தும் தமிழ்ச் சொல்லுக்கு மொழி முதல்எழுத்துக்களாம். ஆக, அவை 12, 72, 8, 6,4 – என 102 ஆம். (வீ. சோ.சந்திப்.7)உயிர் பன்னிரண்டும், ககர வருக்க உயிர்மெய்கள் பன்னி ரண்டும், சகரவருக்க உயிர்மெய்கள் பன்னிரண்டும், தகர வருக்க உயிர்மெய்கள்பன்னிரண்டும், நகரவருக்க உயிர்மெய்கள் பன்னிரண்டும், பகரவருக்கஉயிர்மெய்கள் பன்னிரண்டும். மகரவருக்க உயிர்மெய்கள் பன்னிரண்டும், வகரவருக்க உயிர்மெய்கள் எட்டும், ஞகர வருக்கத்தில் மூன்றும், யகரவருக்கத்தில் மூன்றும் ஆக, இத்தொண்ணுற்றெட்டு எழுத்தும் மொழிக்குமுதலாம்.(வகரம் அ ஆ இ ஈ எ ஏ ஐ ஒள – என்னும் எட்டுயிரொடும், ஞகரம் ஆ எ ஒ -என்னும் மூன்றுயிரொடும், யகரம் ஆ ஊ ஓ – என்னும் மூன்றுயிரொடும் கூடிமொழி முதலாம் என்க.) (நே. எழுத். 7)உயிர் பன்னிரண்டும், ககர சகர தகர நகர பகர மகர வருக்க உயிர்மெய்கள்தனித்தனியே பன்னிரண்டு பன்னிரண்டாக எழுபத்திரண்டும், உ ஊ ஒ ஓ- அல்லாதஎட்டு உயிர்களொடு கூடிய வகரவருக்க உயிர்மெய் எட்டும், அ ஆ உ ஊ ஓ ஒள-என்னும் ஆறு உயிர்களொடு கூடிய யகரவருக்க உயிர்மெய் ஆறும், அ ஆ எ ஒ -என்னும் நான்கு உயிர்களொடு கூடிய ஞகர வருக்க உயிர்மெய் நான்கும், அகரஉயிரொன்றொடும் கூடிய ஙகர உயிர்மெய் ஒன்றும் ஆக 103 எழுத்துக்கள்மொழிக்கு முதலாவன. (நன். 102-106)மொழிக்கு முதலாம் எழுத்துக்கள் பொதுவும் சிறப்புமாம் இருவகையானும்தொண்ணுற்று நான்காம் என்பது அறிக. ‘சுட்டுயா எகர……. முதலாகும்மே’(நன். 106) என்றாரும் உளராலோ எனின், முதலாவன இவை ஈறாவன இவை என ஈண்டுக்கருவி செய்தது மேல் நிலைமொழியீறு வருமொழி முதலோடு இயையப்புணர்க்கும்பொருட்டன்றே? அவ்வாறு புணர்த்தற்கு இயைபில்லாத ஙகரமும்அங்ஙனம் – இங்ஙனம் – உங்ஙனம்- யாங்ஙனம்- எங்ஙனம் – என இவ்வாறுமொழிக்கு முதலாம் என்றல் பயனில் கூற்றாம் என மறுக்க, அன்றியும்,அங்கு- ஆங்கு, யாண்டு – யாண்டையது, அன்ன – என்ன என்றாற்போலும்இவ்வொற்றுக்களும் மொழிக்கு முதலாம் என்றல் வேண்டுதலான், அவர்க்கும்அது கருத்தன்று என்க. (இ.வி.27 உரை)