வையை யாற்றுக்கருகில் பொய்யாத புது வருவாயினை யுடையதாக அமைந்திருந்தது மையல் என்றும் ஊர் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. செல்வம் முதலியவற்றால் வரும் செருக்கு என்று பொருள்படும் மையல் என்னும் சொல் வையையாறு பாய்ந்து வளம் கொழித்த ஓர் ஊருக்குப்பெயராய் அமைந்தது போலும். பாண்டியன் வஞ்சினம் கூறும் பொழுது இந்த ஊர்ப் பெயரும், இவ்வூர்த் தலைவன் மாவனின் பெயரும் இடம் பெற்றிருப்பதையறியலாம். பாண்டி நாட்டகத்து ஊராக இருந்திருக்கலாம்.
“வையை சூழ்ந்த வளங்கெழு வைப்பிற்
பொய்யா யாணர் மையல் கோமான்” (புறம், 71:10 12)