‘மெல்லொற்று வல்லொற்றிறுதிக்கிளைஒற்று ஆதல்’

‘மெல்லொற்று இறுதிவல்லொற்றும் கிளைவல்லொற்றும்’ – என்று பிரித்துப்பொருள் செய்தனர் இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும். (தொ.எ.415,414)எ-டு :குரங்கு+கால்= குரக்குக்கால் – மெல்லொற்று ஙகரம் இறுதிவல்லொற்றாதல். எண்கு +குட்டி = எட்குக் குட்டி – மெல்லொற்று ணகரம் தன்கிளையான டகர ஒற்றாதல்.என்று எடுத்துக்காட்டுத் தந்தனர்.கிளையொற்று என்பது அவ்வவ் வருக்க ஒற்றுக்களை.‘மெல்லொற்றுக் கிளைவல்லொற்றாகும்’- என்ற தொடர்க்கு, மெல்லொற்றுத்தொடர்மொழிக்கண் நின்ற மெல்லொற் றெல்லாம் இறுதியில் நிற்கும்வல்லொற்றாகும்; அஃதாவது இறுதியில் நிற்கும் வல்லொற்றாய்த் திரியும்என்பது.எ-டு: ஓர்யாண்டு + குழவி = ஓர்யாட்டைக் குழவிகன்று +திரள் = கற்றுத்திரள்யாண்டு, கன்று – என்பன போன்றவற்றிலுள்ள ணகரனகரங்கள் டகரறகரங்களாகிய இனஒற்றுக்களாகத் திரிதல் கண்டு, அந்த ணகர னகரங்கள் பிறஎழுத்துக்களொடு கூடி நின்றவழியும் அவ்வாறு திரியும் என்ற கருதி,எண்கு+ குட்டி = எட்குக் குட்டி, என்பு +காடு = எற்புக்காடு – எனப்பிற்காலத்தில் வழங்கியமை தொல்காப்பியனார்க்கு உடன்பாடன்று. (எ. ஆ.பக். 168. 169)