மொழிக்கு முதலில் வருவன வல்லின உயிர்மெய் – 4, மெல்லின உயிர்மெய்-3, இடையின உயிர்மெய்-2, உயிர் – 12 என்பன. இவற்றுள் வல்லினம் அல்லாதமென்மை இடைமை உயிர்க்கணங்கள் ‘இயல்பு கணம்’ எனப்படும். இவை வரு மொழிமுதலில் வரின், நிலைமொழி ஈற்றிலோ வருமொழி முதலிலோ திரிபு ஏற்படாமல்இயல்பாகப் புணர்தலே பெரும்பான்மை. ஆனால் முதல்மொழி தொடர்மொழியாய்நிற்க அதனை அடுத்து வரும் மென்கணம் இயல்பாதலே யன்றிச் சிறுபான்மைமிக்கும் புணரும்.எ-டு : கதிர்+ஞெரி = கதிர்ஞெரி, கதிர்ஞ்ஞெரி; கதிர் +நுனி =கதிர்நுனி, கதிர்ந்நுனி; கதிர் +முரி = கதிர்முரி, கதிர்ம்முரிஇவ்வாறு மெல்லெழுத்து இயல்பாதலேயன்றி உறழ்ந்து முடிதலு முண்டு.(தொ. எ. 145 நச்.)