ங் ஞ் ண் ந் ம் ன் – என்ற ஆறு மெய்களும் மெல்லெழுத்தாம். இவற்றைப்பின்னர் ‘மெல்லெழுத்து மிகினும்’(323), ‘மெல் லெழுத்து இயற்கை’- (145)என்றாற்போல எடுத்துக் குறிப்பிட வேண்டியும், இவை மென்மையானமூக்கொலியான் பிறத்தல் கருதியும் இவற்றை மெல்லெழுத்து என்றார். (தொ.எ.20 நச். உரை)