மெல்லின மெய் வருக்கத்தால் வரும்செய்யுள்

எ-டு : ‘நின்னைநா னென்னென்னே னின்னைநா னென்னுன்னேநின்னைநா னின்னெனே னின்னானி – னின்னானாநாநாநா நின்னுனா னூனநீ நன்னானேநீநா னெனநீ நினை’நின்னை நான் என் என்னேன்; நின்னை நான் என் உன்னேன்; நின்னை நான்நின்னானின் இன்னானா நின் என்னேன்; நாநா நாம், ஊனம், நின் உன் நான் நீ(த்துள்ள) நான் என நினை; நீ நன்னானே – எனப் பிரித்துப் பொருள்செய்க.“நின்னை யான் நின் செயல் பற்றி வினவேன்; நின் செயல்களை எக்காரணம்பற்றியும் நினையேன்; உன்னை நான் உன்னைச் சேர்ந்த எனக்கு இன்னாசெய்பவனாக நின் தன்னலம் கருதுகின்றாயே என்று கூறமாட்டேன்; நின் னையேவிரும்பும் நான் பலவித அச்சங்களையும் குற்றங்களை யும் உறுவேன். என்னைநீத்துவிடும் நீ, நானா இருந்து நினைத்துப்பார். நீ அதனை விடுத்துமகிழ்ச்சியாகப் பாடிக் கொண்டிருக்கிறாய்” என்ற பொருளுடைய இப்பாடற்கண்,நகரமும் னகரமும் ஆகிய இரண்டு மெல்லெழுத்து வருக்கங் களே வந்துள்ளன.(இ. வி. 689 உரை)