வல்லெழுத்தை இனமெல்லெழுத்தாக மெய்பிறிதாக்கிக் கோடல். அஃதாவதுவல்லெழுத்தை இனமெல்லெழுத்தாகத் திரித்தல்மகரஈற்றுப் பெயர் வன்கணம் வருமொழி முதலில் வரின் ஈற்று மகரம்கெட்டு வருமொழி வல்லெழுத்து இடையே மிக்கு,மரம் +கிளை =மரக்கிளை – என்றாற் போல வேற்றுமைப் புணர்ச்சிக்கண்வரும். ஆனால் இரண்டாம் வேற்றுமைத் தொகையாகப் புணரும்போது, மரம்+குறைத்தான் =மரங் குறைத்தான் – என வல்லெழுத்து மிக வேண்டிய இடத்துஇனமெல்லெழுத்து வருதல் ‘மெலிப்பொடு தோன்றல்’ ஆகும். மெலிப்பு -மெல்லெழுத்து. (தொ.எ.157 நச்.)