மெய் பிறிது ஆதல்

இது புணர்ச்சியில் நிகழும் மூவகைத் திரிபுகளுள் ஒன்று. மெய் பிறிதுஆதல் – வடிவு வேறுபடுதல்.எ-டு : மண்+ குடம் = மட்குடம் – ணகரம் டகரமாய் வடிவுவேறுபட்டது. சொல் + கேட்டான்= சொற் கேட்டான் – லகரம் றகரமாய் வடிவுவேறுபட்டது.யான் + ஐ = என்னை- ‘யா’ என்பது ‘எ’என வடிவு வேறுபட, னகரம்இரட்டித்தது.இங்ஙனம் ஓரெழுத்துப் பிறிதோர் எழுத்தாய்த் திரியும் திரி பினைத்தொல். ‘மெய் பிறிதாதல்’ என்றார். (தொ.எ. 109 நச்.)