‘மெய் பிறிது ஆகு இடத்து இயற்கைஆதல்’

ணகர னகர ஈற்று மெய்கள் நிலைமொழி ஈறாகுமிடத்து வருமொழி முதற்கண்வன்கணம் வரின் ணகர னகரங்கள் முறையே டகர றகரங்களாய் மெய் பிறிதாகும்(வடிவு திரியும்)- என்ற விதி பயன்படுத்தப்பட வேண்டிய இடத்து, இரண்டாம்வேற்றுமைப்புணர்ச்சியாயின், அத்திரிபு பெறாது இயல்பாகப் புணர்தல்.எ-டு: மண்+ குடம் = மட்குடம் – மெய் பிறிது ஆதல்பொன் +குடம் = பொற்குடம் – மெய் பிறிது ஆதல்மண் + கொணர்ந்தான் = மண் கொணர்ந்தான்பொன் + கொணர்ந்தான் = பொன் கொணர்ந்தான் – என ணகர. னகர ஈறுகள்இரண்டாம் வேற்றுமைப் புணர்ச்சிக்கண் இயல்பாய் முடிந்தன. (தொ.எ. 157நச்.)