‘மெய்யொடு சிவணும் அவ்வியல்கெடுத்தே’

நிறுத்த சொல்லின் இறுதி நிற்கும் புள்ளியெழுத்தின் முன்குறித்துவருசொல்லின் முதல் வரும் உயிர்தான் பிளவுபட்டு இசைக்காமல்,அரை மாத்திரை ஒலிப்புடையதாய் நிற்கும் புள்ளியெழுத்தின் இயல்பினைக்கெடுத்து, ஒலிப்பு இல்லாத மெய்வடிவாக்கி அதனொடு பொருந்திஇசைக்கும்.எ-டு : நூல் +அழகு =நூலழகு; பால் + ஆறு =பாலாறு; ஆல்+இலை=ஆலிலை; அருள் +ஈகை = அருளீகை; புகழ் + ஒளவியம் =புகழெளவியம் (தொ. எ.138 ச. பால.)