மெய்யெழுத்துத் தனித்தொலிக்கும் இயல்பின்றி, வாயுறுப்புக் களான்உருவாகி வடிவுற்று அனுகரண ஓசையான் ஒலிநிலை எய்தி, தடையுற்றுவெடித்தும் அடைவுற்று நழுவியும் தடை யின்றி உரசியும் நெகிழ்ந்தும்,நெஞ்சுவளி – மிடற்றுவளி – மூக்குவளி – இசைகளான் வெளிப்பட்டுச்செவிப்புலனாம்; உயிரும் உயிர்மெய்யுமாகிய எழுத்துக்களின்பின் உயிரிசைஅலகின் துணையான் புள்ளியுற்று ஒலிக்கும்; வாயுறுப்புக் களின் தொழில்முயற்சியும் வளியிசையும் காரணமாக வன்மை – மென்மை – இடைமை – என்னும்தன்மைகளைப் பெறும்; உயிரிசையைத் துணையாகக் கொண்டு அவற்றின் உந்துதலான் உயிர்மெய்யாகி இசைத்து அலகு பெறும்; உயிரும் குற்றியலிகரமும்குற்றியலுகரமும் ஏற இடங்கொடுத்து, அவ் வழித் தனது மாத்திரையை இழந்து,ஏறிய உயிரின் மாத்திரை யளவே தனக்கு அளவாகக் கொண்டு, உயிர்மெய் என்னும்குறியீடு பெற்று நிற்கும்; மொழிக்கண் விட்டிசை யாது தொடர்ந்துவரும்;உடன்நிற்றற்கு ஏலாத மெய் இணைய வருவழித் திரிந்து பிளவுபடாமல்தொடரும்; தனக்குப் பின் வரும் உயிர்மெய்யின் ஒலியை மயக்கித்திரிபுபடுத்தும்; உயிரைக் கூடியோ சார்ந்தோ சொல்லாயும் சொல்லுறுப்பாயும் அமைந்து பொருள் விளக்கும்; பண்ணிசைகளையும் வண்ணங்களையும்உண்டாக்கும்; உயிர்ப்பிசைகளை ஏற்று நெடுமை – குறுமை – என்னும்குறியீடு பெறும்; தம்மை ஊர்ந்த உயிர்களுக்கு வன்மை – மென்மை – இடைமை -என்னும் குறியீடுகளை எய்துவிக்கும்;தாம் உயிர்மெய் ஆவதற்குத்துணைசெய்யும் உயிர்களைத் தமக்குரிய பிறப்பிடத்தினின்று பிறக்கச்செய்து தாமே தலைமை பெறும்;மெய்-புள்ளி- உயிர்மெய்- என்னும் மூவகையாகச்செயற்பாடு பெற்றுவரும். (தொ. எ. பக். 19, 20 ச. பால.)