மெய்யும் ஒற்றும் புள்ளியும்

பதினெட்டு மெய்களும் வடிவு கொள்ளும் நிலைமைக்கண் செவிப்புலனாவதில்லைஆதலின், அந்நிலை மெய் என்றும் ஒற்று என்றும்கூறப்படுகிறது. அவற்றைச் செவிப்புலனாக்க வேண்டின், அகரம் முதலியஉயிர்ப்பிசைகளான் உந்தாமல், அனுகரண ஓசையை உயிர்ப்பாக்கி உந்த அவைசெவிப்புல னாகும். அங்ஙனம் வெளிப்படுத்தத் துணைபுரியும் ஓசையைஅரைமாத்திரையளவே இசைத்தல் வேண்டும் என, ‘ மெய்யின் அளவே அரையெனமொழிப ’ என்பர் தொல்காப்பியனார். அம்மெய்யினது முழுத்தன்மையும்புலப்படுத்த வேண்டின், அகரவுயிரைச் சாரியையாகக் கொடுத்து அதனால்வெளிப் படுத்தல் வேண்டும். இதனை ஆசிரியர் ‘ மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் ’ என்றார்.இவ்வாறாக அனுகரண உயிர்ப்பிசையும் அகரச்சாரியையும் இன்றிஅம்மெய்கள் மொழியுறுப்பாக ஓர் உயிரெழுத்தையோ உயிர்மெய் யெழுத்தையோசார்ந்து அவற்றின்பின் வருமிடத்து நன்கு ஒலிக்கும் அந்நிலையை(அல்-கால்-அவல்- காவல்) ஆசிரியர் ‘புள்ளி’ எனச் சுட்டிக் கூறுவர்.ஆகலின் புள்ளிமெய் ஒருமொழியின் இடையிலும் ஈற்றிலுமே நிற்கும்.இதனை ‘ மெய்யீறெல்லாம் புள்ளியொடுநிலையல் ’ என்றார்.ஒலிப்புற்று நிற்கும் புள்ளிமெய்கள் அந்நிலைமைக்கண் உயிர் ஏறஇடம் தாரா; ஒலிப்புநிலை நீங்கி வடிவுகொண்ட முன்னைய நிலையில்தான்உயிரேற இடம் தரும். இதனைப் ‘புள்ளி யீற்றுமுன் உயிர்தனித்தியலாது , மெய்யொடு சிவணும் அவ்வியல்கெடுத்தே’ என்பார் ஆசிரியர். அங்ஙனம் மெய்யினை ஊர்ந்து அம்மெய்யினைவெளிப்படுத்துங்கால், உயிர் தன் தலைமைப்பாட்டினையும் பிறப்பிடத்தையும்இழந்து மெய்க்குத் துணையாகிறது. மெய் தலைமைப் பாடுற்று உயிர் மெய் எனநிகழ்கிறது. ஆதலின் உயிர்மெய்யினை மெய்யின் பிறிதொரு நிலையாகவேஆசிரியர் கூறுகிறார். ‘ புள்ளி யில்லா எல்லா மெய்யும்…உயிர்த்த லாறே ’ என்பது தொல். சூத்திரம். (தொ. எ. பக். 11 ச. பால.)