மெய்யின் இயற்கை

உருவாகி வடிவு பெறும் மெய்யெழுத்துக்களின் தன்மை யாவது, அவைஒலிப்பு உடையனவாயும் நிற்றல். புள்ளி யொடும்+ நிலையல் = புள்ளியொடுநிலையல். உம்மையான், புள்ளியொடு நில்லாமல் உயிரோடியைந்துஉயிர்மெய்யாகவும் நிற்கும் எனக்கொள்க. (உயிர் மெய் – உயிர்க்கும்மெய்) மெய்யானது ஒலிப்பின்றி உருவாதலும், உயிர்ப்பு உந்த அரைமாத்திரையளவு ஒலித்தலும், உயிர் இயைய இசைத்தலும் ஆகிய மூன்று நிலைகளையுடைத்து என்பது பெறப்படும். (தொ. எ. 15 ச. பால.)