தனிமெய் அரைமாத்திரை அளவிற்று. அது நாச் சிறிது புடை பெயரும்சிற்றொலி ஆதலின், தனிமெய்யைக் கூறிக் காட்ட லாகாது. ஆகவே, அகர உயிரொடுசேர்த்து மெய்யினை உயிர்மெய்யாக ஒலித்தலும், அகரம் ஏறிய மெய்யாகக்கூறிக் காட்டலும் மரபாயின.எ-டு :‘வல்லெழுத் தென்ப கசட தபற’ (தொ.எ. 19 நச்.)‘மெல்லெழுத் தென்ப ங ஞ ண ந ம ன’ (தொ.எ. 20 நச்.)‘இடையெழுத் தென்ப யரல வழள’ (தொ. எ. 21 நச்.)இவ்வாறு மெய்கள் அகரத்தொடு சிவணியே ஒலிவடிவிலும் வரிவடிவிலும்காட்டப்பெறுகின்றன. (தொ. எ. 46 நச்.)