மெய்மயக்கம் நுல்மரபில் கூறப்பட்டகாரணம்

மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்களும் ஈற்றில் வரும்எழுத்துக்களும் மொழியிடைப்படுத்து உணரப்பட வேண்டு தலின்,தனியெழுத்துப் பற்றிய நூல்மரபில் கூறப்படாது, மொழியிடைப்படுத்துஉணரப்படுவனவற்றைக் குறிக்கும் மொழிமரபில் வைக்கப்பட்டன. மொழியிடையேவரும் இடைநிலை மெய்மயக்கமும் மொழியிடைக் காணப்படுவ தொன்றாதலின்அதுவும் மொழிமரபில் வைக்கப்பட வேண்டு மெனின், மொழிக்கு இடையே வரும்எழுத்தென்னாது, இவ் வெழுத்துக்கு இவ்வெழுத்து நட்பு, அல்லன பகை – என்றசெய்தியையே விளக்குதலின், இச்செய்தி நுல்மரபில் கூறப் பட்டது. (சூ.வி.பக். 57)