தொல். தனிமொழி இலக்கணத்தை மொழிமரபின்கண் கூறியுள்ளார்;மெய்மயக்கத்தை நூல்மரபில் கூறியுள்ளார். இம்மெய்மயக்கம் ஒரு மொழிக்கண்கொள்ள வேண்டுவதோர் இலக்கணமாயின், ஆசிரியர் தனிமொழியினைப் பற்றிக்கூறும் மொழிமரபில் கூறியிருப்பார். மொழியின் முதலில் நிற்கும்எழுத்துக்கள், ஈற்றில் நிற்கும் எழுத்துக்கள் இவற்றைக் கூறுமிடத்தேயேமொழியிடை நிற்கும் மெய்மயக்கத்தைக் கூற வேண்டும். மொழிமரபில் கூறாதுநுல்மரபில் மெய்மயக்கம் கூறிய அதனால், இதனை ஒருமொழிக்கண்ணேயே கொள்ளவேண்டுவதன்று. இங்குக் கூறப்பட்ட செய்தி, இன்ன மெய் யெழுத்தினோடு இன்னமெய்யெழுத்து மயங்கும் என்று அவற்றின் இயல்பினைக் கூறிய அத்துணையேஆகும். இதனை இடைநிலை மயக்கம் என்று கூறுவது தக்கதன்று; மெய்மயக் கம்என்றலே தகும். இம்மயக்கத்திற்கும் புணர்நிலைக்கும் வேற்றுமை உண்டு.புன்கால், பல்குதல் – முதலிய சொற்களில் ககரத்தொடு மயங்கிய னகர லகரமெய்கள், சந்தியில் பொற் குடம், பாற்குடம்- என்றாற் போலத் திரிவனஆயின. (எ. ஆ. பக். 23, 24)