இது தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஆறாம் இயலாக உள்ளது. முன்ஐந்தியல்களில் கூறப்பட்ட அகப்புறச் செய்தி களை உடற்குறியால்வெளியிட்டு உவமத்தைப் போலப் பொருளைப் புலப்படுத்தும் மெய்ப்பாடு,அவ்வைந்தியல் களையும் அடுத்துச் செய்யுளியலை ஓட்டி அமைந்த உவம இயற்குமுன்னர்தராக ஆறாம் இயலாக அமைந்துள்ளது.இவ்வியலில் நாடகநூலார் குறிப்பிடும் மெய்ப்பாடுகள், இயற்றமிழ்அகம்புறம் பற்றிய செய்யுள்களுக்கு மிகத் தேவையாகப் பயின்று வரும்மெய்ப்பாடுகள், பயிலாது அருகிவரும் மெய்ப்பாடுகள், களவுக் காலத்தில்புணர்ச்சிக்கு முன் நிகழும் மெய்ப்பாடுகள், புணர்ச்சிக்குப் பின்நிகழும் மெய்ப்பாடுகள், களவுக்காலத்திற்கே சிறந்து கற்புக்காலத்தும்கலந்து வரும் மெய்ப்பாடுகள், வரைதல் வேட்கையைப் புலப் படுத்தும்மெய்ப்பாடுகள், கற்பிற்கே சிறந்த மெய்ப்பாடுகள், தலைவன் தலைவியர்க்குஉரிய பத்துவகை ஒப்புமைகள், நற்காமத்துக்கு ஆகாத மெய்ப்பாடுகள் ஆகியவைஇறுதிப் புறனடைச் செய்தியோடு 27 நூற்பாக்களால் கூறப்பட்டுள.மெய்ப்பாடு கூறிய ஓத்து ஆகுபெயரான் மெய்ப்பாட்டியல் எனப்பட்டது.அகத்திணையியல் முதல் பொருளியல் ஈறாகக் கூறப்பட்ட ஐந்தியல்களிலும்சுட்டப்படும் அகமும் புறமும் பற்றிய ஒழுகலாற்றிற்கும், பொருளியல்இறுதியில் சுட்டப் பட்ட காட்டலாகாப் பொருள் எல்லாவற்றிற்கும் பொதுவாகிய மனக்குறிப்பு இவையாகலின், இவற்றை வேறு கொண்டு ஓரினமாக்கிமெய்ப்பாட்டியல் என வேறோர் இயலாக, முன் கூறப்பட்ட அகப்பொருள்புறப்பொருள் பற்றிய ஐந்தியல் களொடும் தொடர்புடையதாகத் தொல்காப்பியனார்அமைத்துள்ளார். (தொ. பொ. 249 பேரா.)கூத்தநூலுக்குரிய இம்மெய்ப்பாடுகளை இயற்றமிழ் நூலா கியதொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் ஆராய்வது என்னையெனின்,இவ்வியற்றமிழில் அகம் புறம் பற்றிய பாடல்களுக்கு இன்றியமையாதசெய்திகளையே கூறினார்; சுவைக்கு ஏதுவாகிய பொருளினை அரங்கினுள் நிறீஇ,அது கண்டு குறிப்பும் சத்துவமும் நிகழ்த்தும் கூத்தனையும் அரங் கில்தந்து, பின்னர் அவையரங்கினோர் அவன் செய்கின்ற மெய்ப்பாட்டினைஉணர்வாராக வருகின்ற நாடக நூல் முறைமையெல்லாம் ஈண்டுக் கூறினாரல்லர்.(250 பேரா.)இயற்றமிழ்ச் செய்யுளில் இயற்குறியன்றிச் செயற்கைக் குறி புணர்ச்சிவழக்காறில்லை. உணர்வோடு உள்ளக்கருத்தை உரைக்கப் பல செயற்கைக் குறிவகுத்துக்கோடல் கூத்த நூல் வழக்காம். (மெய்ப். பாரதி. முன்.)இம்மெய்ப்பாடுகள் பொதுவாக அகப்பொருள் புறப் பொருள் துறைகள்அனைத்திற்கும் அமைய வருவனவும், சிறப்பாக அகத்துறைகளுக்கே ஆவனவும் எனஇருவகைப் படுதலின், பொதுவியல்புடையனவற்றை முன்னர்க் கூறிச்சிறப்பியல்புடையனவற்றைப் பின்னர்க் குறிப்பிடுகிறார். ஒருவருடையஉள்உணர்வுகளுள், மற்றவர் கண்டும் கேட்டும் அறியப் புற உடற்குறியால்புலப்படுவனவே இயற்றமிழ்ச் செய்யுளில் மெய்ப்பாடு எனப்படும். ஆதலின்,அவையே இவ்வியலில் விளக்கப்பட்டுள. (மெய்ப். பாரதி. முன்.)