சொற்சீரடியால் வேந்தனுடைய புகழ் வரலாற்றினைக் கூறி அவன் தன்தேவியொடு வாழுமாறு வாழ்த்தி, அவனுடைய ஆட்சியாண்டினையும்,இயற்பெயரினையும் (பிற சிறப்புப் பெயர்களையும்) குறித்து விளக்கும்பாட்டு வகை. (இச்செய் யுள் நடையில் அவனுடைய போர் கொடை இவற்றின்வெற்றியேயன்றி, ஒரோவழி முன்னோர் வெற்றியும் இடம் பெறக் கூடும்.) (இ.வி. பாட். 71, பன்னிருபாட். 313)