குரக்குக்கால், கழச்சுக்கோல், எட்டுக்குட்டி, மருத்துப்பை,பாப்புக்கால் எற்புச்சட்டம் – எனத் திரிந்தன. நாற்கணத் தொடும்ஒட்டுக.ஞெண்டுக்கால், வண்டுக்கால், பந்துத் திரட்சி, கோங்கிலை, இசங்கிலை,புன்கங்காய், பொதும்பிற் பூவை, குறும்பிற் கொற்றன் – என்றல்தொடக்கத்தன திரியாவாம்.குரக்குக்கடி, குரங்கின் கடி, வேப்பங்காய், வேம்பின் காய்,பாப்புத்தோல், பாம்பின் தோல் – என்றல் தொடக்கத்தன திரிந்தும்திரியாதும் வந்தன. (நன். 183 மயிலை.)