குரங்கு, கழஞ்சு, எண்கு, மருந்து, பாம்பு, என்பன- மென்தொடர்க்குற்றுகரஈற்றுச் சொற்கள். இவை வேற்றுமைப் புணர்ச்சியில்,மெல்லொற்று வல்லொற்றாகத் திரிய வரு மொழி வல்லெழுத்து மிக்கு முடியும்;இயல்புகணமாயின் மெல்லொற்று வல்லொற்றாகத் திரிதல் ஒன்றுமே உண்டு-வருமாறு: குரக்குக்கால், குரக்குச்செவி, குரக்குத்தலை, குரக்குப்புறம் – எனவும், குரக்குஞாற்சி, குரக்குநிணம், குரக்கு முகம்,குரக்குவிரல், குரக்கு (உ) கிர்- எனவும் வரும்.ஞெண்டு, பந்து, பறம்பு, குறும்பு – என்றாற் போல்வன மெல் லொற்றுவல்லொற்று ஆகாதன; வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலும், இன்சாரியைஏற்று அதன் னகரம் றகர மாகத் திரிந்து முடிதலும் ஏற்ற பெற்றியாகக்கொள்க.வருமாறு: ஞெண்டுக்கால், பந்துத்திரட்டு; பறம்பிற் பாரி, குறும்பிற்சான்றோர்.‘மன்னே’ என்றதனான். குரக்குக்குட்டி – குரங்கின்கால், பாப்புத்தோல்- பாம்பின் தோல்- என ஒன்று தானே ஓரிடத்துத் திரிந்தும் ஓரிடத்துத்திரியாதும் வருதலும் கொள்க. இன்னும் அதனானே, ’அற்புத்தளை’ (நாலடி12:2) அன்பினாற் செய்த தளை – என வேற்றுமை யாதலேயன்றி, அன்பாகிய தளை-எனஅல்வழியும் ஆதலின், அல்வழிக்கண்ணும் மெல்லொற்று வல்லொற்றாகத் திரிதல்கொள்க. (இ.வி.எழுத். 103)