மென்தொடர்மொழிக் குற்றியலுகர ஈற்றுவினையெச்சம்

இருந்து கொண்டு, கண்டு சென்றான், சென்று தந்தான் – என்றாற் போல இவ்வகைக் குற்றியலுகரஈற்று வினையெச்சம்இயல்பாகப் புணரும். (தொ. எ. 427. நச்.)ஏழாவதன் காலப்பொருளவாகிய சொற்கள் இயல்பாகப் புணர்வன உள.எ-டு : பண்டு கொண்டான், முந்து கொண்டான், இன்று கொண்டான், அன்று கொண்டான், என்று கொண்டான். (430 இள.)உண்டு என்ற சொல், உண்டு பொருள் – உள் பொருள்- என இருவகையாகப்புணரும். (எ. 430 நச்.)உண்டு காணம், உண்டு சாக்காடு, உண்டு தாமரை,உண்டு ஞானம், உண்டு யாழ், உண்டு ஆடை – என இயல்பாகப் புணர்வனவேபெரும்பான்மை. (430 நச். உரை)வண்டு என்பது வேற்றுமைக்கண் இன்சாரியை பெற்று வண்டின் கால் எனவரும். (420 நச்.)பெண்டு என்பது வேற்றுமைக்கண் இன்சாரியை யோடு அன்சாரியையும்பெற்றுப் பெண்டின்கை – பெண்டன்கை – என வரும். (421 நச்.)ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து – என்ற எண்ணுப் பெயர்கள்அன்சாரியை பெற்று ஒன்றன் காயம் – என்றாற் போலப் புணரும். ஒன்றனாற்கொண்ட காயம் என வேற்றுமைப் புணர்ச்சி (419 நச்.)