உகரம் ஏறிய வல்லொற்றுக்களுள் ( கு சு டு து பு று) ஒன்றுமொழியீற்றதாய் நிற்ப அதன் அயலெழுத்து ஒரு மெல்லின மெய்யாக வரின்,அம்மொழியின் ஈற்றிலுள்ள குற்றியலுகரம் மென்தொடர்க் குற்றியலுகரமாம்.குற்றியலுகரத்துக்கு மாத்திரை அரை.எ-டு : அங்கு, பஞ்சு, வண்டு, பந்து, அம்பு, நன்றுமெல்லொற்று ஆறு ஆதலின், அதனை அடுத்து வரும் மென்தொடர்க்குற்றியலுகரமும் ஆறாம். (நன். 94)