மென்தொடர்க் குற்றியலுகரப்புணர்ச்சி

அல்வழிக்கண் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் வன்கணம்வரினும் இயல்பாகப் புணரும்.எ-டு : குரங்கு கடிது, பஞ்சு சிறிது, வண்டுதீது, பந்து பெரிது,நண்பு பெரிது, கன்று பெரிது.1. மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரம் பெற்று முடிவனவும், 2.மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிவனவும்,3. மெல்லொற்றுத் திரியாது ஐகாரமும் வல் லெழுத்தும் பெற்றுமுடிவனவும் உள.எ-டு : 1. யாண்டு – ஓர்யாட்டை யானை, ஐயாட்டை எருது2. அன்று, இன்று – அற்றைக் கூத்தர், இற்றைப் போர்3. மன்று, பண்டு – மன்றைத் தூது, மன்றைப் பனை; பண்டைச்சான்றோர். (தொ.எ.425 நச். உரை)ஆங்கு, ஈங்கு, ஊங்கு, யாங்கு, அங்கு, இங்கு, உங்கு, எங்கு – என்பனவல்லொற்று மிக்கு, ஆங்குக் கொண்டான் – என்றாற் போல முடியும். யாங்குஎன்பது யாங்குக் கொண்டான் – என வருதல் பெரும்பான்மை; யாங்கு கொண்டான்-என இயல்பாயும் முடியும். (நச் . உரை 427-429)மென்தொடர்மொழி வேற்றுமைக்கண் வன்கணம் வரின் வல் லெழுத்துமிகுதலுமுண்டு. எ-டு: குரங்குக்கால்இடையே மெல்லொற்று வல்லொற்றாய்த் திரிந்து வல்லெழுத்துமிகுதலுமுண்டு.எ-டு : இருப்புத் தொடர், குரக்குக்கால்தத்தம் இனமான வல்லொற்றாகத் திரிதலுமுண்டு.எ-டு : எண்கு+குட்டி =எட்குக்குட்டி; என்பு + காடு:எற்புக்காடு; அன்பு + தளை=அற்புத்தளை.பறம்பிற் பாரி, குறும்பிற் சான்றோர் – என மெல் லொற்றுத்திரியாமையும் உண்டு.இயல்பு கணத்திலும் குரக்கு ஞாற்சி, குரக்கு விரல், குரக்கு(உ)கிர் – என மெல்லொற்று இனவல்லொற் றாதலுமுண்டு. (414 நச்.உரை)மென்தொடர்மொழிக் குற்றுகரஈற்று மரப்பெயர்கள் (புல்லும் அடங்கும்)அம்முப் பெற்றுத் தெங்கங்காய், சீழ்கம்புல், கம்பம் புலம், கமுகங்காய்என வருதலும் கொள்க. (தெங்கு, கமுகு – இவையிரண்டும் புல்லினம்.) (415நச். உரை)மெல்லொற்று வல்லொற்று ஆகாது அம்முச்சாரியை பெறும் மரப்பெயர்களும்உள. எ-டு: குருந்தங் கோடு, புன்கஞ் செதிள் (416 நச். உரை)அக்குச்சாரியை பெறுவனவும் உள. எ-டு:குன்றக்கூகை, மன்றப் பெண்ணை(418 நச். உரை)மெல்லொற்று வல்லொற்றாகத் திரியும் மரப்பெயர்களும் கொள்க.(புல்லினமும் அடங்கும்) எ-டு: வேப்பங் கோடு, ஈச்சங் குலை; (ஈஞ்சு :புல்லினம்) (416 நச். உரை)நிலைமொழியீற்றில் மென்தொடர்க் குற்றியலுகரம் நிற்ப, வருமொழிமுதற்கண் வன்கணம் வரினும், அல்வழிப் புணர்ச்சி யில் இயல்பாக முடியும்.(நன். 181)எ-டு: வந்து கண்டான், சென்றான், தந்தான், போயினான்.ஏழாம் வேற்றுமைஇடப்பொருள் உணரநின்ற அங்கு இங்கு உங்கு எங்குஆங்கு ஈங்கு ஊங்கு யாங்கு ஆண்டு ஈண்டு யாண்டு – என்னும் மென்தொடர்க்குற்றியலுகர ஈற்று இடைச்சொற்களின் முன் வரும் வல்லினம் மிகும்.எ-டு: அங்குக் கண்டான், இங்குச் சென்றான், ஆண்டுத் தந்தான்,யாண்டுப் போனான்…. முதலாகக் காண்க.ஏழாம் வேற்றுமைக் காலப்பொருள் உணரநின்ற அன்று இன்று என்று பண்டுமுந்து- என்னும் மென்தொடர்க் குற்றியலுகர ஈற்று இடைச்சொற்களின்முன்வரும் வல்லினம் இயல்பாகவே முடியும்.எ-டு: அன்று கண்டான், இன்று சென்றான், பண்டு தந்தான், முந்துபோயினான் (நன். 181 சடகோ. உரை)வேற்றுமைப் புணர்ச்சிக்கண், மென்தொடர்க் குற்றியலுகர ஈற்றுமொழிகளுள் சில நிலைமொழிகள் (நாற்கணம்வரினும்) தமக்கு இனமாகியவன்தொடர்க்குற்றியலுகர மொழி களாகத் திரியும்.எ-டு: மருந்து +பை = மருத்துப்பை; குரங்கு + மனம் =குரக்குமனம்; இரும்பு + வலிமை = இருப்புவலிமை; கன்று +ஆ =கற்றா(கன்றொடு கூடிய பசு)இவை வேற்றுமைப் புணர்ச்சி. வேப்பங்காய் என்பதும் அது; இடையேஅம்முச்சாரியை மிக்கது.நஞ்சு + பகைமை= நச்சுப் பகைமை (உவமத்தொகை)இரும்பு +மனம் =இருப்புமனம் (இதுவுமது)என்பு + உடம்பு = எற்புடம்பு (இருபெயரொட்டு)இவை அல்வழிப் புணர்ச்சி.குரங்கு +குட்டி =குரங்குக்குட்டி, குரக்குக்குட்டி(வேற்றுமை)அன்பு+தளை =அன்புத்தளை, அற்புத்தளை (அல்வழி)இருவழியும் விகற்பித்து வந்தவாறு. (நன். 184)அன்று, இன்று, (பண்டு, முந்து) ஐயாண்டு, மூவாண்டு- என்பன அற்றைப்பொழுது, இற்றை நாள் (பண்டைக்காலம், முந்தை வளம்) ஐயாட்டைப்பிராயத்தான், மூவாட்டைக் குழவி- என ஐகாரச்சாரியை ஈற்றில் பெற்றுப்புணர்ந்தன. அன்று முதலிய நான்கும் மெல்லொற்று வல்லொற்றாய்த் திரிந்துஐகாரச் சாரியை ஏற்றலும், பண்டு- முந்து- என்பன திரிபின்றி ஐகாரம்ஏற்றலும் காண்க. (நன். 185)