மூவிடத்து மகர ஈற்றுப் பெயர்அல்வழிப் புணர்ச்சி

மூவிடத்து மகர ஈற்றுப் பெயர்கள் எல்லாரும், எல்லீரும், தாம், நாம்,யாம், எல்லாம் – என்பன. அவை வருமொழி வன்கண மாயின் ஈற்று மகரம்இனமெல்லெழுத்தாய்த் திரியும்.வருமாறு: எல்லாருங்குறியர், எல்லீருங்குறியீர், தாங்குறியர், தாங்குறிய, நாங் குறியம், யாங் குறியேம்.மென்கணமாகிய ஞகரமும் நகரமும் வரின், எல்லாருஞ் ஞான்றார், எல்லாருந்நீண்டார், எல்லீருஞ் ஞான்றீர், எல்லீருந் நீண்டீர், தாஞ் ஞான்றார்,தாந் நீண்டார், நாஞ் ஞான்றாம், நாந் நீண்டாம், யாஞ் ஞான்றாம், யாந்நீண்டாம் – என வருமொழி மெல்லெழுத்தாகிய ஞகர நகரமாக மகரம்திரியும்.இடையினமும் உயிரும் வரின், எல்லாரும் யாத்தார், வந்தார்,அடைந்தார் – என மகரம் இயல்பாகப் புணரும். எல்லாம் என்பது வன்கணம்வரின் ஈற்று மகரம் கெட்டு வல்லெழுத்து மிக்கு வருமொழியொடு புணர்ந்துஇறுதிக்கண் உம்முச் சாரியை பெறும். எல்லாம்+குறிய > எல்லா +குறிய > எல்லாக் + குறிய+உம்= எல்லாக் குறியவும். ஏனைக் கணங்கள் வரின்மகரஈறு கெட்டு வருமொழியொடு புணர்ந்து இறுதிக்கண் உம்முச் சாரியைபெறும்.எல்லாம்+ ஞாண், நூல், மணி, வட்டு, அடை= எல்லா ஞாணும், எல்லாநூலும்,எல்லாமணியும், எல்லாவட்டும், எல்லா வடையும் (வகரம் உடம்படுமெய்)எல்லாம் வாடின, எல்லாமாடின – என இயல்பாக முடிதலும் கொள்க.சிறுபான்மை எல்லாம் என்பது, வலி வரின் மகரம் கெட்டு மெலிமிக்குஇறுதியில் உம்முப் பெற்று எல்லாங் குறியவும், எல்லாஞ் சிறியவும் – எனவரும்.உயர்திணைக்கண் எல்லாம் என்பது, எல்லாக் கொல்லரும், எல்லாநாய்கரும், எல்லா வணிகரும், எல்லா அரசரும் – என ஈறு கெட்டு, வன்கணத்துவலிமிக்கு ஏனைய கணத்து இயல்பாகப் புணர்ந்தும்,எல்லாங்குறியரும், எல்லாஞ்சிறியரும்- என ஈறு கெட்டு இனமெல்லெழுத்துமிக்குப் புணர்ந்தும், இவ்விரு திறத்தும் இறுதியில் உம்முச்சாரியைபெற்று முடிதல் கொள்க.எல்லாங் குறியர், எல்லாங் குறியீர், எல்லாங் குறியேம் – என ஈறுகெட்டு இனமெல்லெழுத்து மிக்கு இறுதிக்கண் உம்முப் பெறாது வருதலும்,எல்லாம் வந்தேம், எல்லா மடைந்தேம்- என இடைக்கணமும் உயிர்க்கணமும்வரின் இயல்பாகப் புணர்தலுமுள.நும் என்பது, ‘நீஇர்’ எனத் திரிந்து பயனிலை கொண்டு முடியும். எ-டு: நீஇர் கடியிர். (தொ.எ.320- 323 , 326 நச்.)