மூவிடத்தும் மகரஈற்றுப் பெயர்வேற்றுமைப் புணர்ச்சி

எல்லாரும் என்பது தம்முச்சாரியையும், எல்லீரும் என்பதுநும்முச்சாரியையும், எல்லாம் என்பது அஃறிணைக்கண் வற்றுச்சாரியையும்உயர்திணைக்கண் நம்முச்சாரியையும் பெற்றுவரும். எல்லாரும் எல்லீரும்என்பவற்று இறுதி உம்முச் சாரியை பிரித்து வருமொழிக்குப் பின்னர்க்கூட்டப்பெறும்.எ-டு : எல்லார்தங்கையும், எல்லீர்நுங்கையும் – எனவும்எல்லாவற்றுக்கோடும், எல்லாநங்கையும் – எனவும்தம் நும் நம் – என்பவற்றது மகரத்தை வருமொழி வல்லெழுத் திற் கேற்பஇனமெல்லெழுத்தாகத் திரித்தும், எல்லாம் என்பதன் ஈற்று மகரத்தைக்கெடுத்தும் புணர்க்க. இயல்பு கணம் வரினும் இச் சாரியைகள் வரும்.எ-டு : எல்லார்தம்யாழும், வட்டும், அணியும் – எனவும்எல்லீர்நும்யாழும், வட்டும், அணியும் – எனவும்எல்லாவற்றுயாப்பும், வலியும், அடைவும் -எனவும்எல்லாநம்யாப்பும், வலியும், அடைவும் – எனவும் வருமாறுகாண்க.தாம் நாம் யாம் – என்பன தம் நம் எம் – என்றாகி வருமொழிக் கேற்ப.ஈற்று மகரம் கெட, இனமெல்லெழுத்து மிக்கு,தங்கை, தஞ்செவி, தந்தலை – என வரும். (நங்கை…. எங்கை…..முதலாகக் கொள்க.)மென்கணத்து மகரமும் இடையினமும் உயிரும் வரின் இயல்பாயும்,தனிக்குறில்முன் ஒற்று இரட்டியும் முடிதலும் கொள்க.எ-டு: தஞ்ஞாண், தந்நூல் – ஈற்று மகரம் கெட, வருமொழி மெல்லொற்றுஇரட்டுதல்.தம்மணி, தம்யாழ், தம்வட்டு – இயல்புதம் + இலை (தம்மிலை) – தனிக்குறில் முன் மகரம் உயிர்வரஇரட்டுதல்(நம் எம் – என்பவற்றொடும் ஒட்டுக.)தம காணம், எம காணம், நும காணம் – என ஈறு அகரச் சாரியைபெறுதலுமுண்டு.நும்மின் மகரம் வலி வரின் கெட்டு மெல்லொற்று மிக்கும், ஞகரநகரங்கள் வரின் அவ்வொற்று இரட்டியும், மகர யகர வகரங்கள் வரின்இயல்பாயும், உயிர்வரின் மகர ஒற்று இரட்டியும் புணரும்.எ-டு : நுஞ்செவி; நுஞ்ஞாண், நுந்நூல்; நும்மணி, நும் யாழ்,நும்வட்டு; நும்மாற்றல்.எல்லாரும் எல்லீரும் – என்பன இடையே தம் நும் – சாரியை பெறாமல்எல்லார்கையும் எல்லீர்கையும் – என்றாற் போல வருமொழியொடுபுணர்தலுமுண்டு. (தொ. எ. 320, 322, 324, 325 நச். உரை)