ஞானசம்பந்தர் சென்ற தலமாக இது காட்டப்படுகிறது, துருத்தி என்னும் குற்றாலத்திற்குச் சென்று (தஞ்சைமாவட்டம்), பின்னர் அங்கிருந்து மயிலாடுதுறைக்குச் செல்கின்றார். இடையில் வழிப்பட்டதலமாக மூவலூர் சுட்டப்படுவதால், இது இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஓர் பகுதியாகத் தான் இருக்க வேண்டுமென்பது தெளிவாகத் தெரிகிறது. எனினும் பெயர்க் காரணம் தெரியவில்லை.
திரைத்தடம் புனல் பொன்னி சூழ் திருத் துருத்தியினில்
வரைத் தலைப் பசும்பொன் எனும் வண் தமிழ்ப்பதிகம்
உரைத்து மெய்யுறப்பணிந்து போந்துலவு மந்நதியின்
கரைக்கண் மூவலூர்க் கண்ணுதலார் கழல் பணிந்தார் (பெரிய – 34-439)
மூவலூர் உறை முதல்வரைப் பரவிய மொழியால்
மேவு காவலில் எத்தியே விருப்பொடும் போந்து
பூவலம் தண் புனற்பணைப் புகலியர் தலைவர்
வாவி சூழ் திருமயிலாடு துறையினில் வந்தார் (-437)