செய் என்னும் ஏவல்வினையின் பின்பு வி-பி- என்னும் இரண் டனுள் ஒன்றுவரின், செய்வி என்னும் பொருளைப் பெறும். இவையிரண்டும் ஒருங்குவரினும், ஒன்றே இணைந்து வரினும் ஏவல்மேல் ஏவல் தோன்ற, மூவராவான் ஒருகருத்தனைக் காட்டும். (ஏவுவார் மூவர்; இயற்றுதல் கருத்தா ஒருவன்.)எ-டு : நடப்பி, வருவி, மடிவி, சீப்பி, கேட்பி, அஃகுவி-இவை செய்வி என்னும் ஏவல்வினைப் பகாப்பதம்.நடத்துவிப்பி, வருவிப்பி, நடப்பிப்பி, கற்பிப்பி – விபி என்பனஇரண்டும் இணைந்தும் ஒன்றே இணைந் தும் வந்த செய்விப்பி என்னும்ஏவல்மேல் ஏவல் பகாப்பதம். (நன். 137 மயிலை.)