மூவகைப் பெயரெச்சக் குறிப்பு முன்வலி வரின் இயல்பாதல்

அமர்முகத்த, கடுங்கண்ண, சிறிய, பெரிய, உள, இல, பல, சில (இவைபெயரடியாகப் பிறந்த பெயரெச்சக்குறிப்பு): பொன்னன்ன (இஃதுஇடைச்சொல்லடியாகப் பிறந்தது): கடிய (இஃது உரிச்சொல்லடியாகப் பிறந்தது)- இவற்றை நிலைமொழியாகவும், குதிரை – செந்நாய் – தகர்- பன்றி – என்பவற்றை வருமொழியாகவும் கொண்டு புணர்ப்பவே, இயல்பாக முடியும். (நன். 167சங்கர.)