முதல் இடை கடைக் குறையாகிய மூன்றும் வழக்கின்கண் மரூஉப் போலச்செய்யுட்கண் மரூஉவாய் அடிப்பாடாக வரும் என்றும் பொருள் கூறுவர். அதுபொருந்தாது, அறுவகை விகாரங்களும் செய்யுள் செய்யும் சான்றோர் அழகு பெறஅச்செய்யுளில் வேண்டுழி வருவிக்க வரும் என்பதன்றே? அதை நோக்கிஇச்சூத்திரத்தை மாட்டெறிந்தார் ஆதலால், இதற்கும் செய்யுட் செய்யும்சான்றோர் வருவித்துழி வரும் என்பதே கருத்து. இது கருதியன்றே ‘ஒவ்வொருமொழி’ என்பதை ‘ஒருமொழி’ என இவர் இச்சூத்திரம் செய்தார்? இன்னும் அதுபொருந்தாது என்பதற்குப் ‘பசும்புற் றலைகாண் பரிது’ (குறள் 16)என்பதில் காண்பது என்பது ‘காண்பு’ எனக் கடைக் குறைந்ததும், ‘சான்றோர்என்பிலர் தோழி’ என்பதில் ‘சான்றோர் என்பார் இலர்’ என்பது ‘என்பிலர்’எனக் கடைக் குறைந்ததுமே சான்றாதல் உணர்க. இனி, வழக்கிடத்தும்இலைக்கறியை ‘லைக்கறி’ எனவும், ‘நிலா உதித்தது’ என்பதற்கு ‘லாஉதித்தது’ எனவும், ‘இராப்பகல்’ என்பதற்கு ‘ராப்பகல்’ எனவும், கேழ்வரகு‘கேவரகு’, நீர்ச்சிலை ‘நீச்சீலை’, போகி றான் ‘போறான்’, பாடுகிறான்‘பாடுறான்’ எனவும், ‘ஆனை யேறும் பெரும்பறையன்’ என்னும் மரபு பற்றிவந்த ‘தோட்டி யான் என்பதைத் ‘தோட்டி’ எனவும் தண்ணீர் ‘தண்ணீ’ வெந்நீர்‘வெந்நீ’ எனவும் முறையே இம்மூவகை விகாரங்களும் வருதல் கொள்க. (நன்.156 இராமா.)