மூழிக்களம்

சோறு மலைநாட்டுத் தலமாகிய இது, ஆலப்புழையினின்றும் பத்து மைல் தொலைவில் உள்ளது. திருமங்கையாழ்வாரும், நம்மாழ்வாரும் இங்குள்ள திருமாலைப் பரவியுள்ளனர். களம் என்பது இடம் என்ற பொருளில் அமையினும், மூழி என்பதன் பொருள் விளங்கவில்லை. தமிழ் லெக்ஸிகள், மூழி’ என்பதற்கு, அகப்பை, கமண்டலு, விசேடம், நீர் நிலை, போன்ற பல பொருட்களைச் சுட்டினாலும், அவை இவண் எவ்வாறு பொருத்தமுறும் என்பது புலனாகவில்லை. தவிர. மூழட்டி என்பது மிளகு குறித்தமை தலையும். மூழை என்பது குழிந்த இடம் என்ற பொருளில் அமைவதையும் மலை நாட்டு ஊர் என்ற நிலையில் நோக்க. மிளகு அல்லது குழிந்த இடம் காரணமாக மூழட்டிக்களமாகக் அல்லது மூழைக் களமாக இருந்து, பின் னர் மூழிக்களமாகத் திரிந்ததோ என்ற எண்ணம் தோன்றுகிறது.