ஒரு செய்யுளில் மூன்றே மெய்களும் அவற்றானாய உயிர் மெய்களும்மாத்திரமே வருவது மூன்றெழுத்து மடக்கு என்ற சொல்லணியின்பாற்படும்.எ-டு : ‘மின்னாவான் முன்னு மெனினு மினிவேனின்மன்னா வினைவே னெனைவினவா – முன்னானவானவனை மீனவனை மான வினைவென்வேன்மானவனை மானுமோ வான்?’மின்னா வான் முன்னும் எனினும், இனி இளவேனிலில் மன்னாது இனைவேனாகியஎன்னை வினவாத வானவனை யும் மீனவனையும் வெல்லும் வேலையுடைய முன்னானமானவனை வான் மானுமோ – எனப் பிரித்துப் பொருள் செய்க. (மானவன் -சோழன்).“மின்னி வானம் மழைபெய்யக் கருதும் எனினும், இப்பொ ழுது இளவேனிற்காலத்து மனம் நிலைபேறின்றி வருந்தும் என் நலன் குறித்து வினவாத,யாவர்க்கும் மேம்பட்ட சேரனையும் பாண்டியனையும் போர்வினையால் வென்றவேலினையுடைய மனுகுலத்துச் சோழனை வானம் ஒக்குமோ? ” எனப் பொருள்படும்இப்பாடற்கண், ம – வ – ன – என்ற மூன்றெழுத்துக்களே வந்தமை காணப்படும்.(தண்டி. 97 உரை)