எ-டு : ‘மாயன்சேய் வில்லும் மலர்ப்பொழிலும் காஞ்சனமும்காயம் புதைதிறங்கூர் கச்சியே – நேயமகத்தா ரகத்தா ரருவினையாட் செய்யுமகத்தார் மகத்தார்தம் வாழ்வு’.முதலிரண்டியும் சிலேடை : கடையிரண்டடியும் மடக்கு.நேயம் அகம் தாரகத்தார் – கருணையை ஆன்மாவுக்கு உயிர் நாடியாகஉடையவர்; அருவினை ஆட்செய்யும் மகத்தார் – நீங்குதற்கு அரிய வினைகள்அடிமைசெய்யும் மகத்துவத்தை உடையவர்; மகத்தார் தம் வாழ்வு – செய்யும்யாகத்தில் யூபத்தம்பமாக இருக்கும் திருமாலின் இருப்பிடம்; மாயன்சேய்வில் – திருமாலின் மகனாகிய மன்மதனுடைய கரும்பு வில்; காய் அம்புஉதை திறம் கூர்கச்சி – பிரிந்தவர்மீது கொடிய அம்பு செலுத்தும் காஞ்சிநகர்; மலர்ப்பொழில் காயம் புதை திறம் கூர் கச்சி – பூஞ்சோலைகள் தம்உயர்ச்சி யாலும் செறிவாலும் ஆகாயத்தை மறைக்கும் நிலை மிக்ககாஞ்சிநகர்;காஞ்சனம் – கண்ணாடி; காயம் – தன்னை நோக்கியாரது உடல் பிம்பத்தை;புதை திறம் கூர் கச்சி – தன்னிடம் உட்கொண்டு காட்டும் தன்மை மிக்ககாஞ்சி நகர் – என மன்மதனுக்கும் சோலைக்கும் கண்ணாடிக்கும் சிலேடையாக,‘காயம் புதை திறம் கூர்’ என்னும் தொடர் வந்துள்ளமையால், இப்பாடல்மூன்று பொருள் சிலேடையோடு இணைந்த மடக்காகும், (காயம் புதை திறம் கூர்:முச்சொல்லலங்காரம்) (மா. அ. பாடல் 756).