‘மூன்று தலையிட்டமுப்பதிற்றெழுத்து’

மூன்றை முடியிலே யிட்ட முப்பதிற்று எழுத்துக்கள் எனவே, முப்பத்துமூன்றாகும் தமிழெழுத்துக்கள் என்றவாறு.பேரெண்ணை முன்னர்க் கூறிச்சிற்றெண்ணை அடுத்துக் கூறுதல் தமிழ்மரபு.சிற்றெண்ணை முன்னர்க் கூறிப் பேரெண்ணைப் பின்னர்க் கூறுதல் வடமொழிமரபு.‘மூன்று தலையிட்ட முப்பது’ என்பது காத்தியாயனர் மதம். முப்பத்துமூன்று: தமிழ்மரபு.மொழிக்கு முதலாகும் என்ற 22 எழுத்துக்களும், மொழிக்கு ஈறாகும் என்ற24 எழுத்துக்களும் தமிழ்எழுத்துக்கள் முப்பத்து மூன்றில் அடங்குவனவே.(தொ.எ.103 நச்.)